மத்திய அரசு உறுதியளித்த பிறகும் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு என திமுக நாடகமாடி வருவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொகுதிகள் குறைகிறது என்ற பொய்யைப் பரப்ப முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என டி.கே.சிவகுமாரிடமும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினாரா? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
தொகுதி மறுவரையறை நடக்காதென மத்திய அரசு உறுதியளித்த பிறகும் திமுக நாடகமாடி வருவதாக விமர்சித்துள்ளார்.
அண்டை மாநிலங்களால் புதைந்து போன தமிழக உரிமைகளை மீட்டெடுக்க ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டீர்களா? என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.