நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் வெளிநாடு செல்வதில் தவறில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் மேலும் குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தாங்கும் கூலிப்படை தலைவர்களை காவல்துறை நுண்ணறிவு பிரிவு மூலம் கண்காணித்து தமிழக அரசு அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் தனி விமானத்தில் பாதுகாப்புடன் செல்வது தவிர்க்க முடியாதது அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறினார்.
மடிக்கணினி வழங்கும் திட்டம் பற்றி கேள்விக்கு றிவிப்புகள் வருகின்றன ஆனால் அவை அனைத்தும் முறையாக அமல்படுத்தப்படுகின்றதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.