எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஜி.டி.நாயுடு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று என்றும், பொதுமக்களுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது, வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்படுவதற்காகக் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, சமுதாயத்தில் எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஜி.டி.நாயுடு புகழைப் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.