அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் குரூஸ் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் குரூஸில் யங் பூங்காவில் கார் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.