அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மேற்பார்வையில் வளர்ந்து வரும் மகனை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். மகனின் விருப்பப்படி டிஸ்னிலேன்ட் கேளிக்கை பூங்காவுக்கு 3 நாள்கள் பயணமாகச் சென்ற தாய், விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தபோது, மகனைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.