திருப்பூரில் இருந்து ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநிலத்தவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்தஊர் சென்றிருந்தனர். இந்நிலையில் பண்டிகை முடிந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வட இடந்தியர்களுடன் இணைந்து வங்கதேசத்தினரும் திருப்பூருக்கு வருவதை தடுக்க உரிய சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.