திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர்.
விடுமுறை நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடிய பின்னர், நாழிக் கிணற்றில் குளித்துவிட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க 6 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள சூழலில், பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.