மத்திய அரசே விகிதாசார அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும் என கூறிய பின்னர் திமுககூட்டம் நடத்தியது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராமாவரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொகுதி மறு வரையறை தொடர்பாக பொய்யான பிரசாரத்தை திமுக செய்வதாகவும், மக்களை திசை திருப்புவதற்காக தேவையில்லாத கூட்டம் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறியுள்ளதாகவும், டாஸ்மாக் ஊழல் 2026 தேர்தல் களத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்றும் தினகரன் தெரிவித்தார்.