விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாதை பிரச்சனை காரணமாக இரண்டு குடும்பத்தினர் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பந்தல்குடி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது குடும்பத்தாருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவரது குடும்பத்தாருக்கும் இடையே பாதை சம்பந்தமாகப் பிரச்சனை உள்ளது.
இந்த நிலையில், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் மாரியம்மாள் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான ரம்யா ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.