புதுச்சேரியில் தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்குப் பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரான தீனதயாளன் காரைக்காலில் சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள், அவர்களிடம் 20 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீனதயாளன், சிதம்பரநாதன், செழியன் ஆகியோர் தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்காகப் பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.