சிவகங்கை அருகே மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் இளைஞர்கள் ஒப்படைத்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிவகங்கை அருகே அமைந்துள்ள இலந்தங்குடி கிராமத்தில் 3 நபர்கள் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் பிடிபட்ட மூன்று பேருக்கும் எச்சரிக்கை கூட விடுக்காமல் காவலர் ஒருவர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து இளைஞர்கள் அந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அதனைக் கண்டுகொள்ளாத அந்த காவலர் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்ததால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.