திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முயல் வேட்டையாடச் சென்றவர்களை வனத்துறையினர் கைது செய்த நிலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னாங்கண்ணிப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதி மக்கள் முயல் வேட்டையாடச் சென்றனர். இதனையறிந்த வனத்துறையினர், ஆறு நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களைப் பிடித்தனர்.
இதனைக் கண்டித்து வனத்துறையினரின் வாகனத்தை வழிமறித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.