திருவண்ணாமலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த சேஷாசலம் மற்றும் நாகேந்திரன் ஆகிய இருவர் திருவண்ணாமலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது உரசியதால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த சொகுசு கார் அந்த நபர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.