நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஜாகீர் உசேனுக்கும், கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஃபீக் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ரெட்டியாப்பட்டி மலை பகுதியில் பதுங்கி இருந்த தவ்பீக்கை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் தலைமறைவாக உள்ள தவ்பீக்கின் மனைவி நூரு நிஷாவை போலீசார் தேடி வரும் நிலையில், நூரு நிஷாவின் சகோதரர் அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.