கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற அலுவலகம் உள்ள மைதானம் போதைப்பொருட்களின் கூடாரமாக மாறியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விளவங்கோடு சட்டமன்ற அலுவலகம் அமைந்திருக்கும் குழித்துறை விஎல்சி மைதானம், போதைப் பொருள் விற்பனை மற்றும் உபயோகப்படுத்தும் கூடாரமாக மாறி வருகிறது.
இது குறித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரைந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.