சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் மனுத்தாக்கல் செய்தனர்.
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷூக்கும், பாடகி சைந்தவிக்கும் 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ள நிலையில், தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். விவகாரத்து கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை ஒத்திவைத்தார்.
பின்னர் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் ஒரே காரில் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
















