500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். பெரும்பாலான இடங்களில் அவ்வாறு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே FL2 என்ற மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மார்ச் வரை ஆயிரத்து 65 FL2 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் வகையில் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி வரை 501 FL2 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்துவிட்டு தனியார் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதனால் படிபடிப்பாயக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி கேள்விக்குறியாகி உள்ளது.