தமிழகத்தில் உள்ள 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில், மும்மொழி கொள்ளையின் கீழ் கற்பிக்கப்படும் மொழிகளின் விவரங்கள் மாநில வாரியாக என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் செளதரி, தமிழ் மொழியை கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காக தமிழகத்தில் ஒரு தன்னாட்சி அமைப்பான தமிழ் மெய்நிகர் அகாடமி மூலம் 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.