தமிழகத்தில் நடப்பாண்டில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நுாலகர்கள், உதவி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட நான்காயிரம் பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
ஆயிரத்து 915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்றும், ஆயிரத்து 205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.