கன்னியாகுமரி அருகே பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபர் பட்டா போட்டு ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி மஹாதேவர் கோயிலின் பின்பகுதியில் திருவனந்தபுரம் பத்பநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 56 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் 5அடி உயரமான சிவலிங்கம் உள்ள நிலையில், இந்த பகுதியை அத்தியறை மடம் பராமரித்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் அரசு புறம்போக்கு நிலம் என்று அறிவிக்கப்பட்ட இந்த நிலத்தைத் தனியார் நிறுவனம் நிர்வகித்து வந்தது.
இந்நிலையில், இந்த நிலத்தை இந்து அல்லாத சுர்ஜித் என்பவர் கையகப்படுத்தி உள்ளதாக இந்து முன்னணியின் மரபுசார் மீட்புக்குழு குற்றம்சாட்டியுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலத்தையும் லிங்கத்தையும் மீட்டு அனுதினம் பூஜைகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.