தாம்பரம் அருகே இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி அமைக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மேற்குத் தாம்பரம் கஸ்தூரி பாய் நகரில் புதிதாக மசூதி அமைக்கப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.
கடந்த 1ஆம் தேதி மசூதி திறக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடியிருப்பு பகுதியில் மசூதி அமைந்துள்ளதால் 5 நேரத் தொழுகையின்போது ஒலிக்கும் பாங்கு ஓசையால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெளியே அதிக வாகனங்களை நிறுத்திச் செல்வதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்து மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.