புதுச்சேரி பொதுப்பணித்துறையில் மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் தற்போது வரை வேலை வழங்கவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நீதிமன்ற தீர்ப்பின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றதால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.