மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வண்புருஷோத்தமன் கோயில் தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.