ஆந்திராவில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆறாம் வகுப்பு மாணவர்களை, 10ஆம் வகுப்பு மாணவர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொண்டமூரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்களை, 10 ம் வகுப்பு மாணவர் ஒருவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் கைது செய்தனர்.