வரி செலுத்துவோருக்குச் சாதகமாக நிறைய அம்சங்கள் நிதி மசோதாவில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகள், கனவுகளின் அடிப்படையில் பல்வேறு அம்சங்கள் நிதி மசோதாவில் உள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய நிதி மசோதாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறிய அவர், TCS, TDS வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வரி செலுத்துவோருக்குச் சாதகமாக நிறைய அம்சங்களை மசோதாவில் சேர்த்துள்ளதாகவும் உறுதியளித்தார்.