புதுச்சேரியில் சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேருவை சபை காவலர்கள் குண்டுக் கட்டாகப் பேரவையில் இருந்து வெளியேற்றினர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீது பேசிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, வெகு நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால் குறுக்கிட்ட சபாநாயகர் செல்வம், பிறருக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நேரு, தான் கையில் வைத்திருந்த குறிப்பைக் கிழித்தெறிந்ததுடன் சபாநாயகரை ஒருமையில் விமர்சித்துப் பேசினார். இதையடுத்து சபாநாயகர் உத்தரவின்பேரில் நேருவை அவை காவலர்கள் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றினர்.