தூத்துக்குடி அருகே தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம், தங்க நாணயம் வழங்கி, சுடச்சுட அசைவ விருந்து வைத்த உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் அடுத்த அரசூர் பூச்சிகாடு பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரது டிராவல்ஸ் நிறுவனத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா இடைச்சிவிளை பகுதியில் நடைபெற்றது.
விழாவில் தனது நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்க நாணயங்களை வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வைத்து அசத்தினார். மேலும் அடுத்த வருடம் சிறப்பாகச் செயல்படும் ஊழியருக்கு இன்னோவா கார் பரிசளிப்பதாகவும் பட்டுராஜா தெரிவித்துள்ளார்.