நடிகர் மனோஜ் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.