இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மை சகோதரர்கள் வாழும் இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிம் பேசினார். அப்போது,பாஜக ஆட்சிக்கு வந்தபின் தமிழகம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், 2026-ல் தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் தமிழிசை தெரிவித்தார். அனைத்து தலைவர்களும் இரே இடத்தில் கூடியதை கண்டு முதல்வர் ஸ்டாலின்கு தூக்கம் வராது என்றும் அவர் கூறினார்.