கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ச்சியாக இளம் பெண் ஒருவரை கிண்டல் செய்தும், ஆபாச சைகை காண்பித்தும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் அப்துல் ரசாக்கை கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க நெஞ்சு வலி நாடகம் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.