உதகை படகு இல்லத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்ற வந்தன.
படகு இல்ல ஏரிக்கரையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீர்நிலைகளை ஒட்டி 200 மீட்டாருக்குள் கட்டுமான பணிகள் எதுவும் நடக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்நிலையில், உரிய அனுமதி பெற்று கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக கட்டுமானப் பணிகளை முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.