செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!
Sep 20, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!

Murugesan M by Murugesan M
Mar 26, 2025, 12:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கருணை அடிப்படையில் வேலை வழங்கியதால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், ஆனைகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர், கருணை அடிப்படையில் வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்குக் கருணை அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் வேலை வழங்குமாறு தமிழக அரசுக்குக் கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக்கூறி, தனி நபர் கடந்த 2024-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில், அவர் ஆஜராகாததால் ஆட்சியருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், நிர்வாக காரணங்களால் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை என்றும், மனுதாரருக்குத் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனு தாக்கல் செய்தார்.

மேலும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என்பதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

அதனை ஏற்று மாவட்ட ஆட்சியருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை திரும்பப் பெற்ற நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags: செங்கல்பட்டுArrest warrant against Chengalpattu Collector withdrawn!
Share
Tweet
SendShare
Previous Post

உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Next Post

வங்கதேச அரசை கவிழ்க்க முயற்சி? – முகமது யூனுஸ் மறுப்பு!

Related News

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More

அண்மைச் செய்திகள்

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies