சென்னை வானகரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுப்பிரமணி கோயில் தெருவில், தனியார்ப் பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரிங் போரா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் மேலும் 2 பேருடன் இணைந்து ஹெராயின் போதைப்பொருள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார, 3 கிராம் ஹெராயின், 50 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.