இந்தியாவின் பயோமெட்ரிக் மற்றும் ஆதார் சேவைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளதாகக் காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் ஆதார் சேவை கொண்டுவரப்பட்டது என்றும், அதன் சேவையை அறிந்து அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இத்தகையைப் பாராட்டைப் பெற்றுத் தந்த மன்மோகன் சிங்கிற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.