திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களின் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடு பாதையின் மீது பறவை கூட்டம் வட்டமிட்டபடியே இருப்பதால் அடிக்கடி இந்த சம்பவம் நடக்கிறது.
இந்நிலையில், பறவைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று விமான நிலைய ஆணையம் எச்சரித்துள்ளது.