கோவையில் டி.வி. சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டிக் கேட்ட லாரி ஓட்டுநர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம், கேரளாவைச் சேர்ந்த ஷியாம் ஆகியோர் கோவையில் உள்ள கட்டட பொருள் விற்பனை கடையில் வேலை செய்தனர்.
இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்த நிலையில், ஆறுமுகம் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிக சத்தத்துடன் ஷியாம் டிவி பார்த்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆறுமுகத்தை ஷியாம் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.