டெல்லியில் தாமரை மலர்ந்தது போல் மேற்குவங்கத்திலும் விரைவில் தாமரை மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், டெல்லியில் தாமரை மலர்ந்ததால் தற்போது அங்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
டெல்லியில் தாமரை மலர்ந்ததை போல விரைவில் மேற்கு வங்கத்திலும் தாமரை மலரும் என அவர் கூறினார். அவ்வாறு மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும் போது அங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.