தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மளிகைக் கடையில் இருந்த பெண் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசுவந்தனை சாலையில் ஜெகதீஸ் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கடைக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீபன், ஜெகதீஸின் மனைவி முத்து செல்வியிடம் சிகரெட் கேட்டுள்ளார்.
பின்னர் காசு கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இதுகுறித்து முத்து செல்வி எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தார்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தோணி திலீபன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.