புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மேலும் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.