பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் திமுக ஏமாற்றுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர் என தெரிவித்துள்ளார். வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள் என்றும், ஆனால் திமுக எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.
தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்துள்ளதகாவும், ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மும்மொழி கொள்கையை எதிர்ப்பதை தற்போது நாடும் அறிந்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் மூலம் திட்டமிட்டு நடத்திய நாடகம் மூலம் தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைப்பதாகவும், ஆனால் மக்களின் கவனத்தை திசைதிருப்ப எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.