ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
டாஸ்மாக் துறையில் சுமார் ஆயிரம் கொடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதை சுட்டிக்காட்டி சிவகங்கை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ள அதிமுகவினர், ஆயிரம் கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து ஆயிரம் கோடியை அமுக்கியது யார் என அந்த போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்திலும் அதிமுகவினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஆயிரம் கோடியை அமுக்கியது யார் என்ற கேள்வியை எழுப்பி கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.