ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அஞ்செட்டி, பிலிகுண்டுலு, உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல்லில் 3 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து உயர்ந்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவி ரம்மியமாக காட்சியளிக்கிறது.