தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர், மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வில்சன், மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டூர் ரயில்வே கேட் பகுதிக்குச் சென்றார்.
பின்னர் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வில்சன், நூலிழையில் உயிர் தப்பினார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.