திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மங்கலம் ஏரி அருகே உள்ள கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுசுவரில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏரியின் கழிவுநீர் கிணற்றில் கலந்து தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஒரு குடம் குடிநீரை 20 ரூபாய் கொடுத்து வாங்கி வருவதாகவும், தூய்மையான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.