அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை மாவட்டம், திருத்து பகுதியில் வசித்து வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.