LPG லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் LPG லாரிகள் எரிவாயு உற்பத்தி ஆலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள LPG லாரி உரிமையாளர்கள், கருப்பூர் பகுதியில் இயங்கி வரும் எரிவாயு தொழிற்சாலையில் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணிகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள எரிவாயு உற்பத்தி ஆலையில் 300க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.