மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, நேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உரிமை மீறல் தீர்மானத்தை அவை தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்துள்ளார்.