இந்தியவாழ் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார்.
குடியேற்ற மசோதா தொடர்பான விவாதத்தில் எம்.பி கனிமொழி கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், திமுக எம்.பிக்கள் தன்னை பலமுறை சந்தித்தபோதும் இலங்கை தமிழர் விவகாரம் குறித்து பேசியதில்லை எனக் கூறினார்.
கனிமொழியை போன்றே அகதிகள் மீது தமக்கு அக்கறை உள்ளதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இருந்த போது என்ன கொள்கை இருந்ததோ அதுவே தற்போதும் உள்ளதாக தெரிவித்தார்.
டிஆர் பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அமைச்சராக இருந்தும் ஏதும் செய்யவில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
===