தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய ரயிலை இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழகத்திற்கான இரயில்வே திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அப்போது நடைபெற்ற மறுஆய்வு கூட்டத்தில், தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய ரயிலை இயக்க ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் புதிய பாலத்துடன் சேர்த்து, புதிய ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.