டெல்லியில் பிரதமர் மோடியை ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கத்தினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் வேளாண்மை, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, இந்தியாவில் ஜப்பானிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜப்பான் பிளஸ் முறையை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், பசுமை எரிசக்தித் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதையும் ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கத்தினருக்கு பிரதமர் மோடி விளக்கி கூறினார்.